×

வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க ஆணை..!! - கடலூர் ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

சென்னை:  கடலூர் மாவட்டத்தில் வி.ஏ.ஓ மகனுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கா விட்டால், மாவட்ட ஆட்சியரின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ரவி. இவரது தந்தை கிராம உதவியாளராக பணியாற்றி 2003ம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து கருணை அடிப்படையில் வாரிசு வேலை கேட்டு ரவி கொடுத்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், 9 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், தமிழக அரசு சில அரசு பணிகளுக்கு 2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை தடை விதித்திருந்தது. பின்னர் இந்த தடை 2007ம் ஆண்டு மார்ச் 12ம் தேதி நீக்கப்பட்டு, கருணை அடிப்படையில் விண்ணப்பம் செய்ய 3 மாதம் கால அவகாசம் வழங்கியது.

இந்நிலையில், மனுதாரரின் தந்தை இறந்து 3 ஆண்டுகள் வரை அவரது வாரிசு வேலை கேட்டு விண்ணப்பிக்கவில்லை என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்க முடியாது என தெரிவித்தார். மனுதாரருக்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் வருகிற டிசம்பர் மாதத்திற்குள் அரசு பணி வழங்க வேண்டும். இதனை நிறைவேற்றவில்லை என்றால் 2021ம் ஆண்டு ஜனவரி முதல் மனுதாரர் ரவி அரசு ஊழியராக கருதப்படுவார் என தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு கடை நிலை ஊழியரின் சம்பளத்தை வழங்க வேண்டும். இதனை அமல்படுத்த தவறினால், கடலூர் மாவட்ட ஆட்சியரின் ஊதியத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Tags : heir ,Collector ,Cuddalore ,Chennai High Court , Order , give work, heir,basis , Chennai High Court , Cuddalore Collector
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...