×

முதல்வர் வருகையை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் பிரமாண்ட பந்தல்: அமைச்சர் ஆய்வு

காஞ்சிபுரம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகிறார். இதனை முன்னிட்டு அவரது வருகைக்கான ஏற்பாடுகளை ஊரக தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள், வளர்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று காஞ்சிபுரம் வருகிறார். அப்போது அவர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பல்வேறு புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைக்கிறார்.

இதையாட்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் நடக்கின்றன. இந்த பணிகளை அமைச்சர் பெஞ்சமின் ஆய்வு செய்தார். அவருடன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வாலாஜாபாத் கணேசன், கலெக்டர்கள் காஞ்சிபுரம் பொன்னையா, செங்கல்பட்டு ஜான் லூயிஸ், எஸ்பி சண்முகப்பிரியா மற்றும் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

மாவட்ட செயலாளர் உட்பட 8 பேருக்கு கொரோனா
முன்னேற்பாடு பணிகளில் ஈடுபட்டு வந்த மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார், குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் யேசுதாஸ், நிர்வாகி குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Kanchipuram ,Minister ,Chief Minister ,inspection ,visit , முதல்வர் வருகை, காஞ்சிபுரம், அமைச்சர் ஆய்வு
× RELATED பாமக திடீர் ஆர்ப்பாட்டம்