×

போஸ்டர் ஒட்ட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி தடை

சென்னை: ரசிகர்கள் தன்னிச்சையாக செயல்பட்டு போஸ்டர்கள் எதுவும் ஒட்ட வேண்டாம் என ரஜினி தரப்பில் மக்கள் மன்ற தலைமை நிர்வாகி உத்தரவிட்டுள்ளார். ரஜினிகாந்த் மக்கள் மன்றம் சார்பில் வேலூர், மதுரை, ராமநாதபுரம், கோவை மாவட்டங்களில் சமீபத்தில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்தும் மற்ற கட்சிகளை தாக்கியும் வாசகங்கள் இடம்பெற்றன.

இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு தலைமை நிர்வாகி சுதாகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தலைமையில் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர் அடிக்க வேண்டாம். மறு உத்தரவு வரும்வரை, தன்னிச்சையாக யாரும் செயல்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைமையின் இந்த உத்தரவை நிர்வாகிகள், ரசிகர்கள் ஏற்று நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : fans ,Rajini , Poster, do not paste, Rajini
× RELATED அரசியல் குறித்த கேள்விகளுக்கெல்லாம்...