திருமணமான 10 நாட்களில் வரதட்சணை கேட்டு மிரட்டிய புது மாப்பிள்ளை மீது வழக்கு

அண்ணாநகர்: திருமணமான 10 நாளில் வரதட்சணை கேட்டு மனைவியை மிரட்டியதாக கணவன் உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் ஏமாவின் எனியா (24). இவருக்கும் தெலங்கானாவை சேர்ந்த பரத்ரேசு (27) என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில், திருமணமான 10 நாட்களில் ஆஸ்திரேலியாவுக்கு செல்கிறேன் எனக் கூறிச்சென்ற பரத்ரேசு பின்னர் மனைவியை தொடர்பு கொள்ளவில்லை. இதுபற்றி பரத்ரேசு கேட்டபோது, ‘கூடுதலாக வரதட்சணை கொடுத்தால்தான் உன்னோடு வாழ்வேன்’ என கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால், மனமுடைந்த அவர், மாமியாரிடம் இதுகுறித்து கேட்டுள்ளார். அவரும் கூடுதலாக வரதட்சணை வேண்டும், என கேட்டுள்ளார். இதுபற்றி திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஏமாவின் எனியா புகார் அளித்தார். அதில், ‘திருமணமான 10 நாளில் விட்டுவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்வதாக கூறிச் சென்ற கணவர் தற்போது வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார். இதற்கு அவரது குடும்பத்தினரும் உடந்தையாக உள்ளனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் பரத்ரேசு, அவரது அப்பா, அம்மா, தம்பி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>