×

சென்னையில் உள்ள 7 மண்டலங்களில் குப்பை சேகரிக்க 1,500 பேட்டரி வாகனம்

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சுமார் 5000 மெட்ரிக் டன் அளவிலான குப்பை மாநகராட்சியால் சேகரிக்கப்படுகிறது. இதில் 60 சதவீத மக்கள் மட்டுமே குப்பைகளை தரம் பிரித்து வழங்குகின்றனர்.
இதில் 1, 2, 3, 7, 9, 10, 11, 12, 13, 14, 15 ஆகிய 11 மண்டலங்களில் துப்புரவு பணிகள் மேற்கொள்ளும் பணியை தனியாரிடம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி தேனாம்பேட்ைட, கோடம்பாக்கம், அடையாறு, வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 7 மண்டலங்களில் ஸ்பெயினை சேர்ந்த தனியார் நிறுவனம் துப்புரவு பணிகளை மேற்கொள்ளவுள்ளது.

சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 92 வார்டுகள் இந்த நிறுவனம் பணிகளை மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் 7 மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொள்ள பேட்டரி வாகனங்களை செயல்படுத்த இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதன்படி 1,500 வாகனங்கள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இந்த வாகனங்களில் பேட்டரில் 6 மணி நேரம் சார்ஜ் செய்தால் 50 கிலோ மீட்டர் பயன்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

Tags : zones ,Chennai , 1,500 battery vehicle to collect garbage in Chennai
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...