இந்திய வம்சாவளி முதல் விண்வெளி வீராங்கனை: அமெரிக்க விண்கலத்துக்கு கல்பனா சாவ்லாவின் பெயர்

வாஷிங்டன்: கொலம்பியா விண்கல விபத்தில் பலியான இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான கல்பனா சாவ்லாவின் பெயரை, தனது விண்கலத்துக்கு சூட்டி மரியாதை அளித்திருக்கிறது அமெரிக்கா நிறுவனம். வான்வெளியில் சர்வதேச விண்வெளி ஆராய் ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பொருட்களை சுமந்து செல்வதற்காக பிரத்யேக விண்கலங்கள் உள்ளன.

இதை வர்த்தக ரீதியாகக் கையாண்டு வரும் ‘நார்த்ராப் க்ருமன்’ என்ற அமெரிக்க நிறுவனம், தனது புதிய விண்கலத்துக்கு, ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என்று பெயர் சூட்டியுள்ளது. இது குறித்து  இந்த நிறுவனம் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘விண்வெளி ஆய்வில் கல்பனா சாவ்லா செய்த பங்களிப்பையும், தியாகத்தையும் கவுரவிக்கும் விதமாக, ‘என்ஜி-14’ என்ற விண்கலத்துக்கு ‘எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது.’ என கூறப்பட்டுள்ளது.

புதிய விண்கலத்தில் என்ன சிறப்பு?

* எஸ்.எஸ்.கல்பனா சாவ்லா விண்கலமானது செவ்வாய் கிரக ஆய்வுக்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.

* வரும் 29ம் தேதி இந்த பயணம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 3,629 கிலோ எடை கொண்ட பொருட்களை சுமந்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கல்பனா சாவ்லா- சில நினைவுகள்

* அரியானா மாநிலம், கர்னலில் 1962ம் ஆண்டு பிறந்தவர் கல்பனா சாவ்லா. இளங்கலையில் ஏரோநாட்டிக்கல் பிரிவை பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் 1982ம் ஆண்டு பயின்றார்.

* 1984ம் ஆண்டு மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றவர், டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டத்தையும், கொலராடோ பல்கலைக் கழகத்தில் முனைவர் படிப்பையும் முடித்தார்.

* 1988ம் ஆண்டு நாசாவில் கல்பனாவின் பணிகள் தொடங்கியது.

* 1996ம் ஆண்டு கொலம்பியா விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார். இதன்மூலம், விண்வெளி ஆராய்ச்சிக்குச் சென்ற முதல் இந்திய வம்சாவளிப் பெண் என்ற பெருமையை பெற்றார்.

* கொலம்பியா விண்கலத்தில் 2வது முறையாக விண்வெளிக்கு சென்று விட்டு சக வீரர்கள் 6 பேருடன் 2003, பிப்ரவரி 1ம் தேதி பூமிக்கு திரும்பும்போது, விண்கலம் வெடித்து சிதறி கல்பனா சாவ்லா உட்பட அனைவரும் இறந்தனர்.

Related Stories:

>