×

நாடு முழுவதும் 56 இடங்களில் சிஎன்ஜி நிலையங்கள் துவக்கம்

புதுடெல்லி: பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி எரிபொருள் பிரபலமாகி வருகிறது. இதற்கேற்ப சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் 13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் 56 சிஎன்ஜி நிலையங்களை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று தொடங்கி வைத்தார். இவற்றின் மூலம் மேலும் 50,000 வாகனங்களின் எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

இதன்படி, ஆந்திரா, பீகார், சண்டிகார், குஜராத், ஹரியானா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும், சண்டிகர் யூனியன் பிரதேசத்திலும் மேற்கண்ட சிஎன்ஜி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசுகையில், ‘‘கடந்த 6 ஆண்டுகளில் சிஎன்ஜி நிலையங்களின் எண்ணிக்கை 947ல் இருந்து 2,300 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

Tags : Launch ,country ,locations ,CNG Stations , Country, CNG Stations, Launch
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!