×

கீழடியில் அகழ் வைப்பகம் தொல்லியல் ஆணையர் ஆய்வு

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 6ம் கட்ட அகழாய்வு பணியை தமிழக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் நேற்று பார்வையிட்டார். அகழாய்வு பணிகள் செப்டம்பர் மாதத்துடன் நிறைவு பெற உள்ளதையடுத்து அங்கு 1 ஏக்கர் 88 சென்ட் பரப்பளவில் ரூ.12.21 கோடி நிதி ஒதுக்கீட்டில் உலகத்தரத்தில் அகழ் வைப்பகம் கட்டப்பட உள்ளது. இந்த இடத்தை உதயசந்திரன் பார்வையிட்டு பணிகளை விரைவில் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Tags : Archaeological Commissioner , Below, Archaeological Survey, Commissioner of Archeology, Survey
× RELATED சிவகளையில் இரு இடங்களில் நடந்த...