×

மாநிலங்களவை துணைத் தலைவர் பதவி எதிர்க்கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் மனோஜ்: 14ம் தேதி தேர்தல்

புதுடெல்லி: மாநிலங்களவை துணை சபாநாயகராக இருந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடிந்தது. காலியாக உள்ள இப்பதவிக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக மீண்டும் ஹரிவன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளார். அவர் நேற்று முன்தினம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இவர் ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர். இத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்தலாம் என காங்கிரஸ் கூறியிருந்தது.

இதை ஏற்று, அனைத்து எதிர்க்கட்சிகள் சார்பில் ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா நிறுத்தப்பட உள்ளார். இவர் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார். மக்களவை துணை சபாநாயகர் பதவி கடந்த ஓராண்டாக நிரப்பப்படாமல் உள்ளது. இதற்கும் தேர்தல் நடத்த வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ஆதிர் ரஞ்சன் (காங்.) வலியுறுத்தினார். இது பற்றி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் நேற்று கேட்டபோது, ‘‘நாடாளுமன்றமும், மத்திய அரசும் இணைந்துதான் அதற்கான முடிவை எடுக்க வேண்டும்,’’ என்றார்.

Tags : candidate ,Vice President ,Manoj ,Opposition ,Election ,State Council , Manoj is contesting the state assembly elections as the Vice Presidential candidate for the post of Vice President
× RELATED துணை ஜனாதிபதி தமிழகம் வருகை