×

கொரோனா தடுப்பு களப்பணியில் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடனான ஒப்பந்தம் 19ம் தேதியுடன் முடிகிறது

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணியில் ஈடுபட்டுவரும் தன்னார்வ தொண்டு அமைப்புகளில் ஒப்பந்தம் வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு தடுப்பு பணிகள் எடுக்கப்பட்டது. குறிப்பாக சென்னையில் கொரோனா பரவல் வேகமாக பரவியது. இதனால் சென்னையில் வீடு வீடாக ஆய்வு செய்ய களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன்படி மாணவர்கள், இல்லதரசிகள் என்று மொத்தம் 12 ஆயிரம் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் வீடு வீடாக காய்ச்சல், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி உள்ளதாக என்று ஆய்வு செய்தனர். இதைத்தவிர்த்து 2000 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசைப்பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிலையில் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தகாலம் பணி வரும் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. இதன்பின்பு இந்த களப்பணியாளர்கள் தொடரும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தன்னார்வ தொண்டு அமைப்புகளில் பணிகள் முடிவடைந்தாலும் மாநகராட்சியால் நியமிக்கப்பட்ட களப்பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவார்கள். தொற்று குறைவதை பொறுத்து களப்பணியாளர்கள் படிப்படியாக குறைக்கப்படுவார்கள். மேலும் மாநகராட்சியில் மலேரியோ பணியாளர்கள் உள்ளிட்ட ஒப்பந்த பணியாளர்கள் களப்பணியாளர்களாக இருப்பதால் கொரோனா தடுப்பு பணி தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Corona ,organization ,charity , Corona Prevention Fieldwork, Voluntary Charity, Agreement, 19th, ends
× RELATED தீ தொண்டு நாள் வார விழா