×

மாஸ்கோவில் இந்திய- சீன வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சு வார்த்தை; எல்லையில் உள்ள சூழல் தொடர்பாக முக்கிய ஆலோசனை

மாஸ்கோ: இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ரஷ்யா மற்றும் சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்களை ரஷ்யாவின் மாஸ்கோவில் சந்தித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், சீன வெளியுறவுத்துறை  அமைச்சர் வாங் யி ஆகியோரை வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்துள்ளார். மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு சந்திப்பில் சந்தித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் கூட்டம் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டமைப்பு நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில் இந்தியா தரப்பில் ராஜ்நாத்சிங் பங்கேற்றார். அவர் சீன பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் எல்லை பிரச்சனை தொடர்பாக ஆலோசனையும் நடத்தினார். தற்போது இந்த கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் இடையேயான கூட்டம் நடைபெற உள்ளது.  இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ரஷிய தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.

4 நாட்கள் அரசுமுறைப்பயணமாக ரஷியா சென்றடைந்த அவரை ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர். ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டத்தில் பங்கேற்றப்பின் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்ஷங்கர், சீன மந்திரி வாங் யி சந்தித்து பேசினார். ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி செர்கே லாவ்ரோவ் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இரு நாட்டு வெளியுறவுத்துறை மந்திரிகள் மட்டத்திலான சந்திப்பில், எல்லையில் நிலவி வரும் பதற்றமான சூழல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Tags : Foreign Ministers ,Indo ,Moscow ,Chinese ,border , Moscow, Foreign Ministers, Negotiations
× RELATED வடக்கு அரபிக் கடற்பகுதியில் இந்திய -...