×

வைட்டமின் C ருசிப்போம்..! கொரோனாவை தவிர்ப்போம்..! தமிழகத்தில் மேலும் 5,528 பேர் பாதிப்பு; ஒரே நாளில் 64 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,528 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,86,052-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,65,864 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75,062 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,71,784 ஆக உயர்ந்துள்ளது. 9,19,018 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 72,939 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 77.74% ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,584 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,29,416 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,185 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 64 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,154-ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 991 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,45,606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 163 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 48,482 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 56,30,323
 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,93,154 ஆண்கள், 1,92,869 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ கர்நாடகா - 2

     ^ ஆந்திரப்பிரதேசம் - 3

     ^ பீகார் - 1

Tags : Tamil Nadu , Vitamin C, Corona, Tamil Nadu, Mortality
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...