×

வந்தவாசி அருகே மாணவர்களின் ஊருக்கே சென்று மரத்தடியில் ஆடிப்பாடி, கதை சொல்லி அசத்தும் ரசீனாவுக்கு குவியும் பாராட்டு!!!

திருவண்ணாமலை:  கொரோனா அச்சுறுத்ததால் தமிழ்நாட்டில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படாத நிலையில், திருவண்ணாமலை அருகே தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவர் மாணவர்களின் ஊருக்கு நேரடியாக சென்று நூதன முறையில் பாடம் கற்று தருவது பாராட்டுகளை பெற்றுள்ளது. ரசீனா என்ற அவர் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கல்லாங்குத்து என்ற கிராமத்தில் இயங்கி வரும் பள்ளியில் பணியாற்றி வருகிறார். அந்த பள்ளியில் சுமார் 80 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், சுற்றுவட்டார கிராமங்களுக்கு அவர் நேரில் சென்று அந்தந்த ஊர்களை சேர்ந்த மாணவர்களை மரத்தடியில் சமுக விலகளுடன் அமர செய்து பாடம் கற்பித்து வருகிறார்.

இதனையடுத்து தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட வகுப்புகளுடன் மாணவர்களுக்கு யோகா பயிற்சியையும் அவர் அளித்து வருகிறார். தொடர்ந்து, மாணவர்களுக்கு புரியும் வகையில், பாடங்களை ரசீனா கதையாகவும், ஆடிப்பாடியும் சொல்லி தருவது பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். முதலில் மாணவர்களின் கைகளை சுத்தப்படுத்தும் வகையில் ஆசிரியர் ரசீனா அனைவருக்கும் சானிடைசர் உள்ளிட்ட கிருமிநாசினியை வழங்கி வருகிறார். இதற்கிடையில் மாணவர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : town ,Rasina ,Vandavasi ,hometown , Vandavasi, students, Racina, compliment
× RELATED பொறுப்பேற்பு