×

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை முறையில் தான் உள்ளது : அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை : சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் நடை மேம்பாலத்திற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார்.ஸ்டான்லி மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியை இணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படுகிறது.12 படுக்கைகள் கொண்ட ஸிரோ டிலே வார்டு, 80 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவினையும் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.கொரோனா தனிமைப்படுத்துதல் வார்டு, ரூ.1.80 கோடி மதிப்பிலான 16 சி.டி ஸ்கேன் கருவிகளையும் அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா தொற்றில் இருந்து 94% பேர் குணமடைந்துள்ளனர்.இன்று கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் 400 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இ - சஞ்சீவினி திட்டத்தின் கீழ் பயன்பெறுவோர் எண்ணிக்கையில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.1.68% என்ற இறப்பு விகிதத்தை 1% ஆக குறைக்க முதல்வர் தலைமையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசி பரிசோதனை முறையில் தான் உள்ளது. தகுந்த வழிமுறைகளை பின்பற்றி மனித சோதனை நடத்தப்படும். எனத் தெரிவித்தார்.  


Tags : Oxford University , Oxford, University, Govshield, Vaccine, Testing, Minister Vijayabaskar
× RELATED ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு தடை