×

பிரபல இளம் காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார் : திரையுலகினர், ரசிகர்கள் ஷாக்!!

சென்னை : சின்னத்திரை பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கலக்கப் போவது யார், அது இது எது உள்ளிட்ட நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமானவர் வடிவேல் பாலாஜி. அவருக்கு வயது 42. சின்னத்திரை ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமடைந்த வடிவேல் பாலாஜி, நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில  திரைப்படங்களில் காமெடி நடிகராகவும்  நடித்து வந்துள்ளார். வடிவேலுவின் உடல் மொழியை பிரதிபலித்து ரசிகர்களால் வடிவேலு பாலாஜி என்ற அன்புடன் அழைக்கப்பட்ட இவர் மதுரையைச் சேர்ந்தவர். சில வாரங்களுக்கு முன்பாக ஷூட்டிங்கில் இருந்த போது, வடிவேல் பாலாஜி மயங்கி உள்ளார். உடனே அவர் மருத்துவமனையை நாடியுள்ளார். அப்போது அவருக்கு மூளையில் ரத்த கசிவு இருந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு, அதற்கான சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் வடிவேல் பாலாஜி 15 நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பு காரணமாக  தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது, பக்கவாதம் தாக்கி பாலாஜியின் இரு கைகளும் முடங்கின. தொடர் சிகிச்சைக்குப் பின்னர் போதிய வசதி இல்லாத காரணத்தால் அரசு மருத்துவமனைக்கு வடிவேல் பாலாஜி மாற்றப்பட்டார். எனினும் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.  42 வயதான வடிவேலு பாலாஜிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். வடிவேல் பாலாஜியின் இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Tags : Vadivel Balaji ,Chennai ,Moviegoers ,fans , Comedy actor, Vadivelu Balaji, passed away, moviegoers, fans, shock
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...