×

பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கு தடை: இலங்கை நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்...புத்த மதத்தினர் மகிழ்ச்சி.!!!

கொழும்பு: பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவது தடை செய்யப்படும் என, இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே கடந்த 8-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிவித்தார். விரைவில் பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டு வரப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பிரதமர் ராஜபக்சேவின் முடிவை ஆளும் கட்சியான இலங்கை மக்கள் கட்சி (எஸ்.எல்.பி.பி.,) எம்.பி.,க்கள் நாடாளுமன்றத்தில் வரவேற்றனர். இலங்கையில் மதம் மற்றும் கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் புத்த சாசனா தலைமையிலான நாடாளுமன்றக் குழு இந்தத் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்நிலையில், சட்டம் குறித்து பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவிக்கையில், பசுக்களை இறைச்சிக்காக கொல்வதைத் தடுக்க வேண்டும் என, புத்த மத மறுமலர்ச்சி பிக் ஷுவும், தேசியத் தலைவருமான அனாகரிகா தர்மபாலா வலியுறுத்தி வந்தார். ஆனால், இதை சட்டமாக்க எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது எங்கள் அரசு இதற்கான சட்டத்தை விரைவில் கொண்டு வரவுள்ளது. பசுக்களை இறைச்சிக்காக வெட்டுவதைத் தடை செய்யும் தீர்மானம் இலங்கை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வேண்டுமானால் இறைச்சி சாப்பிடுவோருக்காக இறைச்சியை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து கொள்ளலாம். அதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும், என்றார்.

Tags : Sri Lankan Parliament ,Buddhists , Ban on slaughtering cows for meat: Resolution passed in the Sri Lankan Parliament ... Buddhists happy !!!
× RELATED உணவு, இறைச்சி கழிவுகளில் மின்சாரம்: மாமல்லபுரம் பேரூராட்சியில் அசத்தல்