×

போடியில் நெல் நாற்றங்கால் பாவும் பணி தீவிரம்

போடி: போடி பகுதியில் கொட்டக்குடி ஆறு, முல்லை பெரியார் பாசனத்தின் கீழ் வருடம் ஒரு முறை ஒருபோகம் நெல் சாகுபடி இரு பிரிவுகளாக  நடந்து வருகிறது.அதன்படி போடியை சுற்றியுள்ள குரங்கணி, முந்தல், மீனாட்சிபுரம், பொட்டல்களம், காமராஜபுரம், விசுவாசபுரம் அணைக்கரைப்பட்டி, உப்புக்கோட்டை,  கூழையனூர், பாலார்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி உள்ளிட்ட குதிகளில் சுமார் 1000 ஏக்கர் ஒரு போகத்திற்கான நெல் சாகுபடிக்கு விதைகளை  நாற்றங்கால் பாவும் பணிகள் தற்போது துவங்கியுள்ளது. முதற்கட்டமாக விவசாயிகள் மழையும், கொட்டக்குடி ஆறு , முல்லை பெரியாற்றில்  திறக்கப்பட்ட தண்ணீரை கொண்டு நாற்றாங்கால் பாவம் பணிக்கு தொழிலாளர், இயந்திரம் மூலம் துவங்கி தீவிரமாக நடந்து வருகிறது.போடி உதவி  வேளா ண்மை துறை சார்பில் விதை நெல், தேவையான உபகரணங்கள் வழங்கி வழிகாட்டி வருகின்றனர்.

நெல் விளைச்சலின் போது தண்ணீர் பற்றாக்குறை வருவதை போக்கும் விதமாக பங்காருசாமி, மேலசொக்கநாதபுரம் சங்கரப்பநாயக்கன், வடக்கு பாதை  மரிமூர், மீனாட்சிபுரம் மீனாட்சியம்மன் உள்ளிட்ட கண்மாய்களில் பாசன நீர், மழைநீர் தேங்கி நிரம்பி உள்ளது.இதுகுறித்து போடி வேளாண்மைத்துறை உதவி இயக்குநர் (பொ) அம்பிகா கூறுகையில், ‘போடி பகுதியில் நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் பாவும் பணி  துவங்கியுள்ளது. விவசாயிகள் ஒரு ஹெக்டேருக்கு 5000 மானியத்தை பெற்று தங்களது விவசாய பணிகளை திறம்பட செய்தும், நாற்றங்கால்  பாவிடவும், நடவு அறுவடை செய்வதற்கு இயந்திரங்கள், தொழிலாளர்களையும் பயன்படுத்தி கொள்ளலாம்’ என்றார்.

Tags : paddy nursery , Intensity ,paddy ,nursery , competition
× RELATED டெங்கு தடுப்பு பணிகள் தீவிரம்