×

கேரளாவுக்கு செல்லும் சரக்கு வாகனங்களை குமுளி வழியில் அனுமதிக்க வேண்டும்: லாரி உரிமையாளர்கள் கோரிக்கை

கம்பம்: கொரோ னா பரவலை கட்டுப்படுத்த தேனி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் சரக்கு வாகனங்கள் கடந்த மே 5ம் தேதி முதல் கம்பம்  மெட்டு வழியாக மட்டுமே சென்று வர வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது. அதன்படி கேரளாவிற்கு செல்லும் சரக்கு  வாகனங்கள் மட்டுமே கம்பம் மெட்டு வழியாக அனுப்பப்பட்டது. பயணியர் வாகனங்கள் இ- பாஸ் பெற்று குமுளி வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டு  வருகிறது. கம்பம்மெட்டு வழியாக கட்டப்பனை, குட்டிக்கானம் செல்வதால் 30 கிமீ சுற்றி வருவதுடன் குறிப்பிட்ட நேரத்தில் சரக்குகளை கொண்டு  சேர்க்க முடிவதில்லை. தவிர கம்பமெட்டை அடுத்துள்ள மந்தி பாறை ஏற்றத்தில் சரக்கு வாகனங்கள் ஏறி செல்ல முடியாமல் திணறுகின்றன. மேலும்  கம்பம்மெட்டு என்பது ஒரு வழிப்பாதையாக மிக குறுகலான ஒரு வாகனம் மட்டுமே செல்லக்கூடிய அளவு உள்ளது. இதனால் வாகனங்கள் அடிக்கடி  விபத்திற்குள்ளாகின்றன. அதேநேரம் குமுளி சாலை, இரு வழிச்சாலை என்பதால் வேகமாக கேரளா சென்று திரும்பி வரலாம்.

எனவே குமுளி  வழியாக வாகனங்களை அனுமதிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் செவி  சாய்க்கவில்லை. இந்நிலையில் தமிழக அரசு கடந்த 1ம் தேதி முதல் பொது போக்குவரத்திற்கு அனுமதியளித்ததால் சரக்கு வாகனங்களை மீண்டும்  குமுளி வழியாக எளிதாக கொண்டு செல்ல அனுமதிக்கயளிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அவர்கள் கூறுகையில், ‘குமுளி வழியாக கேரளா சென்று வந்த வாகனங்கள் தற்போது கம்பம் மெட்டு வழியாக கிட்டத்தட்ட 5 மணிநேரம் தாமதமாக  சென்று வருகிறது. கம்பம்மெட்டு முதல் குட்டிக்கானம் வரையுள்ள சாலை மிகவும் குறுகலாக, குண்டும்- குழியுமாக உள்ளதால் வாகனத்திற்கு அதிக  எனவே குமுளி வழியாக கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Kerala ,Lorry Owners , Freight, vehicles, Kerala,Kumuli, route,
× RELATED தன்னம்பிக்கையை அதிகரிக்கும் களரி பயட்டு