×

சேவை மனப்பான்மையுடன் குறைந்த விலையில் முககவசம் தயாரித்து விற்பனை: தையல் தொழிலாளி அசத்தல்

கூடலூர்:  கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட காசியும் வயல் பகுதியில் வசிக்கும் தையல்  தொழிலாளி குஞ்சாபா. இவர் கொரோனா ஊரடங்கு தொழில்  பாதிப்பு காரணமாக தொழிலை  மாற்றி முக கவசம் தயாரிக்க தொடங்கினார். தற்போது பாதுகாப்பான குறைந்த செலவில் சாதாரண மக்கள்  பயன்படுத்தக்கூடிய வகையில் முக கவசம் தயாரித்து ரூ.30க்கு விற்பனை  செய்து  வருகிறார். பருத்தி துணிகளை வாங்கி அதில் இரு  அடுக்கு பாதுகாப்புடன் இந்த முக கவசத்தை தயார் செய்துள்ளார். சாதாரண  முக கவசங்கள் மூக்கு, வாய், தாடை பகுதியை முழுமையாக மூடி நிற்பது இல்லை. ஆனால்  இவர் தயாரித்துள்ள முக கவசம் மூக்கு  பகுதியில் வசதியாக தாங்கி நிற்கும்  வகையில் உள்ளது. இதனால் மூக்கில் இருந்து கீழே இழுத்துக் கொண்டு தொங்குவது  இல்லை. அதேபோல்  கன்னம், தாடை பகுதி முழுவதுமாக பாதுகாக்கும் வகையில் இது  வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதனை சலவை செய்து மீண்டும் மீண்டும்  உபயோகிக்கலாம்.

இவர்  தயாரித்துள்ள முக கவசத்தியின் வடிவம் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து கூடலூர்  காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் பலரும்  இதனை வாங்கி உபயோகித்து  வருகின்றனர். இதை அணிந்துகொண்டால் மூச்சு விடுவதற்கு சிரமப்படாமலும்  பேசுவதற்கு தடை இல்லாமலும் இருப்பதாக இதனை உபயோகிப்பவர்கள்  தெரிவிக்கின்றனர். இந்த முக  கவசம் தயாரித்து விற்பனை செய்வது தற்போது  வருமானத்தை ஈட்டும் வகையில் அமைந்து இருந்தாலும் குறைந்த விலையில்  பாதுகாப்பான முக  கவசங்களை தயாரித்துக் கொடுப்பது மனதுக்கு திருப்தியாக  உள்ளதாக தையல்  தொழிலாளி குஞ்சாபா தெரிவித்தார்.

Tags : With ,service, mindset, mask , low, price, ridiculous
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை