×

மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் புகுந்தது: வியாபாரிகள் அவதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் இம்முறை ஜூன் மாதம் துவங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக ஆகஸ்ட் மாதம் துவங்கியது. ஊட்டி,  குந்தா, கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்து இடர்பாடுகள் ஏற்பட்டன. 10 நாட்கள் மழை பெய்த நிலையில் அதன்பின்  மழையின் தாக்கம் குறைந்தது. அவ்வப்போது மழை பெய்து வந்தது.

இந்நிலையில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு இம்மாத துவக்கம் முதல் நல்ல மழை பெய்து வருகிறது.   இதில் குறிப்பாக நடுவட்டம்,  கிளன்மார்கன், கோத்தகிரி, கோடநாடு, குன்னூர், குந்தா உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் கடந்த இரு நாட்களாக மேகமூட்டத்துடன் லேசான மழை பெய்து வந்த நிலையில் நேற்று மதியம் கனமழை கொட்டியது. சுமார் 2டு மணி  நேரத்திற்கும் மேல் பெய்த மழையால், மார்க்கெட் வளாகத்தில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் மார்க்கெட்டிற்கு வந்திருந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.



Tags : Traders ,Merchants , Rainwater, infiltrates, market, Merchants ,
× RELATED வணிகர் சங்கங்களின் பேரமைப்பு...