×

பழநி மலைக்கோயிலில் பார்சலில் அன்னதானம்

பழநி: பழநி மலைக்கோயிலில் பக்தர்களுக்கு அன்னதானத்தை பொட்டலமாக வழங்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அரசு அறிவிப்பின்படி திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில்,  கடந்த 1ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு  அனுமதிக்கப்படுகின்றனர். ஆன்லைன், தொலைபேசி மூலம் முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது முதற்கட்டமாக  நாள் ஒன்றிற்கு சுமார் 2,500 பேர் வரை சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

வின்ச், ரோப்கார், தங்கரதம், சுவாமி புறப்பாடு, அன்னதானம் போன்றவை  செயல்படவில்லை. நேற்று முதல் மீண்டும் அன்னதான திட்டம் துவங்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை, மதியம், மாலை நேரங்களில் 1,000  பேருக்கு தக்காளி, தயிர், எலுமிச்சை போன்ற கலவை சாதங்கள் பொட்டலங்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பக்தர்கள் மலைக்கோயிலில் அமர்ந்து உண்ண அனுமதியில்லை. பொட்டலங்களை எடுத்து செல்ல மட்டுமே தற்போது  அனுமதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் ஒத்துழைப்பை பொறுத்து அனைவருக்கும் வழங்கும் வகையில் அன்னதான பொட்டலம் திட்டம் விரிவுப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்படுமென கோயில் இணை ஆணையர் (பொ) நடராஜன் தெரிவித்துள்ளார்.


Tags : hill temple ,Palani , Annathanam , parcel , Palani ,temple
× RELATED பழநி நகரில் பிளாஸ்டிக் பொருட்கள்...