×

குளங்களை தூர்வார ரூ.3.54 கோடி தமிழக அரசு ஒதுக்கீடு : குமரியில் குடிமராமத்துப் பணிகளில் நிதி முறையாக செலவு செய்யப்படவில்லை என குற்றசாட்டு!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கியும், குளங்கள் தூர்வாரப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. குடிமராமத்து பணிகள் என்பவை குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் என அனைத்து நீர் ஆதாரங்களையும் தூர்வாரி, அதிகளவில் அகலப்படுத்தியும், ஆழப்படுத்தியும் தண்ணீரை தேக்கி வைத்து விவசாயத்தை பெருக்குவதே ஆகும். மேலும் இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டமும் உயரும். விவசாயிகள் பயன்பெறும் வகையில் உள்ள இந்த திட்டமானது தற்போது அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த திட்டத்தினை கன்னியாகுமரி மாவட்டத்தில் செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சுமார் 3 கோடியே 54 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் சுமார் 2500க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இவற்றை தூர்வாருவதற்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ள  நிலையிலும், அதிகாரிகள் அதனை சரிவர செய்யவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதற்கிடையில் குளங்கள் தூர்வாரப்படாததால், விவசாயத்திற்கும் தண்ணீர் கிடைக்காமல் தவித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினாலும், உரிய பதில் கிடைக்கவில்லை என அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதில் தலையிட்டு குடிமராமத்து பணிகள் குறித்த வெளிப்படையான அறிக்கை வெளியிடவேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : government ,Tamil Nadu ,Kumari , Government of Tamil Nadu, Allocation, Civil Works, Finance, Expenditure
× RELATED ஊட்டி, கொடைக்கானல் செல்ல பொதுமக்கள்...