×

இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 34.71லட்சத்தை தாண்டியது.. குணமடைந்தோர் விகிதம் 77.74% ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 44,65,864 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 75,062 -ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 34,71,784 ஆக உயர்ந்துள்ளது. 9,19,018 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒரே நாளில் 72,939 பேர் குணமடைந்தனர். குணமடைந்தோர் சதவீதம் 77.74% ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிகபட்சமாக 95,735 கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும், 1,172 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர்.



Tags : survivors ,Corona ,India ,victims , Corona, India, vulnerability, number
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...