×

லடாக் அருகே 8 கி.மீ. கட்டுமானங்களை எழுப்பிய சீனா : அத்துமீறலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இந்திய ராணுவம் எச்சரிக்கை


லடாக் : இந்தியாவின் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள பாங்கோங் சோ ஏரி அருகே சீன படைகள் 8 கி. மீ. ஊடுருவி உள்ளே வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அசல் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள கிழக்கு லடாக்கின் பாங்கோங் சோ ஏரி அருகே பிங்கர் 4 என்ற இடத்தில் கடந்த 4 மாதங்களாக ஆக்கிரமித்துள்ள சீன ராணுவம். அங்கு பெரிய கட்டுமானங்களை எழுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சீன ராணுவம் உடனே வெளியேற வேண்டும் என்றும் அத்துமீறினால் இந்தியா பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய ராணுவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இந்திய சீன எல்லையில் சண்டை நிறுத்தப் ஒப்பந்தத்தையும் மீறி அங்கு 45 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை இந்தியா தான் நடத்தியது என்பது சீனாவின் புகாராகும். துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. இந்திய படைகளும் அங்கு குவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஜூன் 15ம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இந்த சூழலில் பாங்கோங் சோ ஏரி அருகே 8 கிமீ தூரத்திற்கு சீன படைகள் ஊடுருவி இருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

ராணுவ அதிகாரிகள் பேச்சு: இதனிடையே, கிழக்கு லடாக்கில் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் இடையே புதன்கிழமையும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது எல்லையில் பதற்றத்தைத் தணிப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், எல்லை நிர்வாகத்துக்கான நடைறைகளை அமல்படுத்துவது குறித்தும் இருதரப்பு அதிகாரிகளும் பேச்சு நடத்தினர்.

Tags : military ,Ladakh ,China ,Indian , Ladakh, Constructions, China, Violation, Indian Army, Warning
× RELATED பிரதமர் மோடியை சீனாவுக்கு தூதராக...