×

மமகவினர் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம். சிறப்பு அழைப்பாளராக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது கலந்து கொண்டார். செங்கல்பட்டு பழைய பஸ் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சா்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக சிறையில் வாடும் முஸ்லீம்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். மாநில நிர்வாகி யாகூப், மாவட்ட நிர்வாகிகள் முகமதுயூனூஸ், ஷாஜகான் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration ,Mamakavinar , Mamakavinar demonstration
× RELATED பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக எஸ்டிபிஐ கட்சி ஆர்ப்பாட்டம்