×

இரும்புக் கடையில் பணம் கொள்ளை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பைபாஸ் சாலையை ஒட்டி பாலகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சோய்பா (50). இரும்புக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடையை மூடிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை வழக்கம்போல் கடையை திறப்பதற்கு வந்தார். அப்போது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

கடையின் உள்ளே சென்று பார்த்தார். கடையில் இருந்த ரூ. 15 ஆயிரம் கொள்ளை போனது தெரியவந்தது. புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடுகின்றனர்.

Tags : Robbery ,iron shop , Iron shop, money, robbery
× RELATED ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி