×

பேஸ்புக் விளம்பரத்தில் செல்போன் ஆர்டருக்கு சீட்டுக்கட்டுகள் டெலிவரி

வேளச்சேரி: பள்ளிக்கரணை அருகே ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தனது மகளின் ஆன்லைன் வகுப்புக்காக செல்போன்களை ஆன்லைனில் பார்த்து வந்தார். அப்போது, இவரது பேஸ்புக் பக்கத்தில் ₹12,999 விலை கொண்ட செல்போனை ரூ2,999க்கு விற்பதாக ஒரு விளம்பரம் வந்தது. இதனை நம்பி அந்த செல்போனை கடந்த 2ம் தேதி ஆர்டர் செய்தார். இந்நிலையில், நேற்று இவர் முகவரிக்கு டெலிவரி செய்ய ஒரு நபர் வந்து தங்களுக்கு செல்போன் பார்சல் ஒன்று வந்துள்ளது. அதற்கான தொகையை கொடுத்தால் பார்சலை கொடுப்பதாக கூறினார். முகமது அலி அதற்கான உரிய பணத்தை கொடுத்து அவர் முன்பே பார்சலை பிரித்துப் பார்த்தார்.

அப்போது, அதில் செல்போனுக்கு பதிலாக சீட்டுக்கட்டுகள் இருந்தன. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டெலிவரி செய்த நபரை பிடித்து பள்ளிக்கரணை போலீசிடம் ஒப்படைத்தார். இதையடுத்து, போலீசார் டெலிவரி கொண்டு வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிவில் டெலிவரி கொண்டு வந்தவருக்கும், பார்சல் அனுப்பியவருக்கும் தொடர்பில்லை என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புகாரை சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். 


Tags : Facebook, cell phone order, deck delivery
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...