×

மனித உரிமை மீறல்கள் எல்லை மீறுகிறது; சீனாவை கண்காணிக்க சர்வதேச குழு தேவை: ஐநா.வுக்கு 300 அமைப்புகள் வலியுறுத்தல்

ஜெனீவா: ‘சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண்பதற்கு, சர்வதேச கண்காணிப்பு குழுவை அமைக்க வேண்டும்,’ என 300க்கும் மேற்பட்ட சர்வதேச சிவில் சமூக அமைப்புகள் ஐநா.வை வலியுறுத்தியுள்ளன.  உலக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு, மனித உரிமைக்கான சர்வதேச அமைப்பு உள்ளிட்ட 300க்கும் மேற்படட சிவில் சமூக அமைப்புகள், ஐநா. சபைக்கு கடிதம் எழுதியுள்ளன. இது நேற்று வெளியிடப்பட்டது. அதில் உள்ள விவரம் வருமாறு: ஹாங்காங், திபெத் போன்ற நாடுகளிலும், உள்நாட்டிலும் சீனா மனித உரிமைகளை மீறி வருகிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில், அந்நாட்டை கண்காணிப்பதற்கு சர்வதேச கண்காணிப்பு குழுவை அமைக்க  வேண்டும். ஹாங்காங் போராட்டத்தில் ஈடுபடுவர்கள்,  உய்குர் முஸ்லிம்கள் மீது அடக்குமுறையை கையாள்கிறது. மேற்கு ஜின்ஜியாங் பிராந்தியத்தில் தடுப்பு மையங்களை அமைத்து, உய்குர் மக்களை சித்ரவதை செய்கிறது. மனித உரிமை பாதுகாவலர்களை சித்ரவதை செய்தல், சிறைக்கு அனுப்புதல், கட்டாயப்படுத்தி காணாமல் போக செய்தல்  மற்றும் வழக்கறிஞர்களிடம் இருந்து உரிமங்களை பறித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் சீன அரசு ஈடுபட்டு வருகின்றது.

ஐநா அமைப்பானது இதுபோன்ற நடவடிக்கையை இனிமேலும் பொறுத்துக்கொள்ளக்கூடாது. ஐநா பொது செயலாளர் , ஐநா மனித உரிமை ஆணையர் உள்ளிட்டோர் சீனாவின் உரிமை மீறல்களுக்கு பகிரங்கமாக தீர்வு காணுவதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : China ,panel ,organizations ,UN ,group , Human rights violations, China, international group needed
× RELATED சீனா, தாய்லாந்தில் இருந்து வரும் வெஸ்டர்ன் ஃப்ராக்ஸ்