×

நடிகைகள் ராகிணி, சஞ்சனாவை தொடர்ந்து கைது பட்டியலில் உள்ள நடிகை யார்?... நகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

பெங்களூரு: கன்னட திரையுலகில் போதை பொருள் புழக்கத்தில் ஈடுபட்டதாக மேலும் ஒரு நடிகை குறித்து மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் அந்த நடிகையை கைது செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், யார்அந்த நடிகை என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கன்னட திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை செய்ததாக ரவி சங்கர், ராகுலை கைது செய்து விசாரித்ததில், நடிகை ராகிணி, சஞ்சனா கைதாகியுள்ளனர். இவர்கள் 2 பேரையும் சி.சி.பி போலீசார் காவலில் எடுத்து மடிவாளா மகளிர் கைதிகள் காப்பகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ராகிணியின் செல்போன் தொடர்பான தடயவியல் ஆய்வு அறிக்கை சி.சி.பிக்கு கிடைத்துள்ளது. அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளது. இதேபோன்று சஞ்சனாவிடம் இருந்த பல தகவல்கள் கிடைத்துள்ளது. 3வது ஒரு நடிகைக்கு இந்த போதை பொருள் வழக்கில் தொடர்புடைய ஆதாரங்கள் சி.சி.பிக்கு கிடைத்துள்ளது. அதை வைத்து, அந்த நடிகையை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சஞ்சனாவை காப்பாற்ற பல கோடி டீல் செய்த எம்எல்ஏ
சஞ்சனா தனக்கு நெருங்கிய அரசியல் பிரமுகர் ஒருவர் மூலம், சி.சி.பி நடவடிக்கை தடுக்க முயற்சி  மேற்கொண்டுள்ளார். இதற்காக பல கோடி  வழங்குவதாக டீல் செய்துள்ளார்.  இலங்கையில் நடந்த விருந்தில் சஞ்சனா, அந்த அரசியல்  பிரமுகருடன் சென்று கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  தற்போது அவர் எம்.எல்.ஏவாக இருப்பதாக கூறப்படுகிறது.

போட்டுவாங்கும் போலீஸ்
நடிகை  ராகிணி மற்றும் சஞ்சனாவிற்கு ஏற்கனவே கருத்துவேறுபாடுகள் இருந்து வருகிறது. இந்நிலையில் சி.சி.பி அதிகாரிகள் இரண்டுபேரையும் குறித்து ஒருவரிடம் மற்றவரை பற்றி கூறி, விவரங்களை சேகரித்துள்ளனர். அதில்  சஞ்சனாவிடம் தான் அதிகப்படியாக தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இரண்டு நடிகைகளுக்குமே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை மேலும் சில நாட்களில் காவலில் எடுத்து விசாரித்தால் பல்வேறு  தகவல்கள் பெறலாம் என்று சி.சி.பி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

Tags : actress ,actresses ,police investigation ,Ragini ,Sanjana ,City Central Crime Branch , Actresses Rakini, Sanjana, arrested, City Central Crime Branch police, investigation
× RELATED நீதிமன்றத்தில் கூட பாதுகாப்பில்லை...