×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் அரை இறுதியில் ஒசாகா: ஸ்வெரவ் முன்னேற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா தகுதி பெற்றார். கால் இறுதியில் அமெரிக்காவின் ஷெல்பி ரோஜர்சுடன் மோதிய ஒசாகா 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார். இப்போட்டி 1 மணி, 20 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு கால் இறுதியில் அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி 6-3, 6-2 என்ற நேர் செட்களில் யூலியா புடின்ட்சேவாவை (கஜகஸ்தான்) வீழ்த்தினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் களமிறங்கிய ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 1-6, 7-6 (7-5), 7-6 (7-1), 6-3 என்ற செட் கணக்கில் குரோஷியாவின் போர்னா கோரிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார். விறுவிறுப்பான இப்போட்டி 3 மணி, 25 நிமிடத்துக்கு நீடித்தது. மற்றொரு கால் இறுதியில் ஸ்பெயினின் பாப்லோ கரினோ புஸ்டா - டெனிஸ் ஷபோவலாவ் (கனடா) மோதினர். ஐந்து செட்கள் வரை இழுபறியாக நீடித்த இப்போட்டியில் கரினோ புஸ்டா 3-6, 7-6 (7-5), 7-6 (7-4), 0-6, 6-3 என 4 மணி, 8 நிமிடம் போராடி வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.

Tags : US Open Tennis Semi-Final Osaka: Sverre ,Osaka , US Open Tennis, Osaka, Swerve
× RELATED கொழுப்பு சத்து குறைக்க மருந்து சாப்பிட்ட 5 பேர் பலி