×

ஆஸ்திரேலியாவுக்கு ஆறுதல் வெற்றி

சவுத்தாம்ப்டன்: இங்கிலாந்து அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் 2 டி20 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. இந்நிலையில், 3வது போட்டி ரோஸ் பவுல் மைதானத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸி. அணி முதலில் பந்துவீச, இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 145 ரன் குவித்தது.

பேர்ஸ்டோ 55 ரன் (44 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்), டேவிட் மலான் 21, மொயீன் அலி 23, டென்லி 29* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய ஆஸி. அணி 19.3 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 146 ரன் எடுத்து வென்றது. கேப்டன் பிஞ்ச் 39, ஸ்டாய்னிஸ் 26, மேத்யூ வேடு 14 ரன் எடுத்தனர். மேக்ஸ்வெல் 6, ஸ்மித் 3 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளிக்க, மிட்செல் மார்ஷ் 39, ஏகார் 16 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மிட்செல் மார்ஷ் ஆட்ட நாயகன் விருது பெற்றார். இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அந்த அணியின் பட்லர் தொடர் நாயகன் விருது பெற்றார். முதல் ஒருநாள் போட்டி மான்செஸ்டரில் நாளை நடைபெறுகிறது.


Tags : Australia , Australia, consolation win
× RELATED தீபக் ஹூடா அதிரடி வீண் ஆறுதல்...