×

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல் ஹரிவன்ஸ் சிங் மீண்டும் போட்டி

புதுடெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஹரிவன்ஸ் நாராயண் சிங் மீண்டும் போட்டியிடுகிறார். மாநிலங்களவை தலைவராக வெங்கையா நாயுடு இருக்கிறார். இதன் துணைத் தலைவராக இருந்த ஹரிவன்ஸ் நாராயண் சிங்கின் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடிந்தது. அதனால், இப்பதவி தற்போது காலியாக இருக்கிறது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இப்பதவிக்கு எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று காங்கிரஸ் நேற்று முன்தினம் முடிவு செய்தது.அதேநேரம், ஹரிவன்சை மீண்டும் இப்பதவிக்கு போட்டியிட வைக்க, ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி முடிவு செய்துள்ளது. இவர், இக்கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத்தை சேர்ந்தவர். வேட்புமனு் தாக்கலுக்கு நாளை கடைசி நாள். அதனால், ஹரிவன்ஸ் நேற்று தனது வேட்பு மனு தாக்கல் செய்தார். இவருக்கு பாஜ கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகளின் பலம் இருப்பதால், எளிதாக வெற்றி பெறுவார் என தெரிகிறது.

Tags : Harivansh Singh ,Election ,Vice President ,State Legislature , State Legislature, Vice Presidential Election, Harivans Singh, Competition
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...