×

சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி: பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி

சேலம்: தமிழக முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் பன்வாரிலாலுக்கு சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார். கடந்த  பிப்ரவரி மாதம் 2017 – ஆண்டு தமிழக முதர்வராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றார். கடந்த 2017 -ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது மறைவுக்கு பின் சில காலங்கள் ஒபன்னீர்செல்வம் முதலராக இருந்தார். பின்பு 2 மாதங்கள் ஓபிஎஸ் முதல்வராக இருந்தார். பிறகு ஒருசில  காரணங்களால் தனது பதவியை ராஜினாமா செய்துக் கொண்டார். 
அதற்குபின் அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக ஏற்றுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகள் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதையடுத்து கடந்த ஏப். 6 -ம் தேதி தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல்  நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை முடிந்தது. இதில் அதிமுகவின் பல அமைச்சர்கள் தோல்வியை தழுவினர். எனவே பெருன்பான்மை இல்லாத அரசாக எடப்பாடி அரசு ஆட்சியை நழுவவிட்டது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். 

The post சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வி: பதவியை ராஜினாமா செய்தார் எடப்பாடி பழனிசாமி appeared first on Dinakaran.

Tags : Edabadi Palanisamy ,Salem ,Chief of ,Tamil Nadu ,Governor ,Panwarilal ,Edabadi Palanisami ,
× RELATED சேலத்தில் கொலையானவர் அடையாளம்...