×

நொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி முஸ்லிம் டாக்ஸி டிரைவர் கும்பலால் அடித்துப் படுகொலை! : எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம்

சென்னை : நொய்டாவில் ஜெய்ஸ்ரீராம் சொல்ல வற்புறுத்தி முஸ்லிம் டாக்ஸி டிரைவர் கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டதற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியப் பொதுச்செயலாளர் முஹம்மது ஷஃபி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளாவது;

நொய்டா நகரில் கடந்த செப்டம்பர் 6, 2020 அன்று, உ.பி. நெடுஞ்சாலையில் ஜெய் ஸ்ரீராம் சொல்ல மறுத்ததால் ஒரு முஸ்லிம் டாக்ஸி டிரைவர் ஒரு கும்பலால் அடித்துப் படுகொலை செய்யப்பட்டதை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.கும்பல் படுகொலைக்கு சில நிமிடங்கள் முன்பு  ஆஃப்தாப் ஆலம் தன் மகனுக்கு செய்த கடைசி மொபைல் அழைப்பின்போது கொலைகாரர்கள் ஜெய் ஸ்ரீராம் முழங்கச்சொல்லி அவரைக் கட்டாயப்படுத்துவதை அவரது மகன் மொபைலில் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.  

கும்பல் படுகொலைகள் குறித்த இந்திய பாரம்பரியத்திற்கு அந்நியமான என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கருத்தை ஏளனம் செய்த முஹம்மது ஷஃபி, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது முதல் நாடு இத்தகைய கொடூரமான தொடர் கும்பல் படுகொலைகளை கண்டுவருவதை நினைவூட்டினார்.

சமீபத்திய கும்பல் படுகொலைகளின் போக்கு என்பது கடந்த காலங்களில் இந்துத்துவ வெறியர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்ட, 1992ல் அயோத்தியா பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்க நடத்தப்பட்ட ரத யாத்திரை தொடங்கி, 2002 ஆண்டில் நிகழ்த்தப்பட்ட குஜராத் இனச்சுத்தகரிப்பு படுகொலைகள் வரை இந்துத்துவத் திட்டங்களை செயல்படுத்துவதன் தொடர்ச்சியே அல்லாமல் வேறு இல்லை என்பதை ஷஃபி சுட்டிக்காட்டினார்.

இத்தகைய கொடூரமான செயல்கள் என்பது முஸ்லிம்களையும், நாட்டு மக்களையும் அச்சுறுத்தி அவர்களிடையே பயத்தை உண்டாக்கி ஒடுக்கப்  பயன்படுத்தப்படும் இந்துத்துவ வெறியர்களின் ஆயுதமாகும்.
நாட்டின் எதிர்கட்சிகள் இத்தகைய அச்சுறுத்தல்களை கண்டிக்க முடியாத அளவுக்கு மிக மோசமாக பலவீனப்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களே முன்வந்து கொலைகாரக் கும்பல்களை ஒடுக்க வழிமுறைகளைக் கையாளும் நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்று முஹம்மது ஷஃபி குறிப்பிட்டார்.

மேலும், கும்பல் படுகொலைக்கு ஆளானவரின் கொலைகாரர்களையும், அவர்களை பின்னாலிருந்து இயக்குவோரையும் உ.பி. காவல்துறை  காலதாமதமின்றி பிடித்துக் கைதுசெய்வதோடு, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு போதிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சி தேசிய பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டார்.

Tags : party ,mob ,taxi driver ,death ,Noida ,STBI , Noida, Jaisreeram, Muslim, taxi, driver
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...