×

குற்றவியல் வழக்குகளில் விசாரணை தரம் குறைவு: தமிழக காவல்துறைக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது...ஐகோர்ட் கிளை கருத்து.!!!

மதுரை: சிவகங்கை மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்த செந்தில் என்பவர் சொத்து பிரச்சனையில் 2010-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பாலமுருகன் என்பவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் 5 ஆண்டுகள்  சிறைத் தண்டனை விதித்தது. இந்நிலையில், சிறையில் உள்ள பாலமுருகன் தண்டனையை ரத்துச்செய்யக்கோரிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.  இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி  புகழேந்தி, இந்த வழக்கை பொருத்தவரை ஒரு குற்றவழக்கில் விசாரணை எப்படி நடைபெறும் என்ற அடிப்படை தெரியாமல் மெத்தனமாகவும்,தனது விருப்பத்திற்கு ஏற்பவும் விசாரணை அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். இதனால், மனுதாரர்  விடுதலை செய்யப்படுகிறார்.

எந்த விசாரணை இருந்தாலும் ஒருதலைப்பட்சமாக நடைபெறக்கூடாது. விசாரணை நியாயமாகவும் பாரபட்சமின்றி நடைபெற வேண்டும். நியாயமான விசாரணை அரசியல் அமைப்பு சட்டத்தின் உரிமையாகும். உண்மையை வெளிகொண்டு  வருவதை விசாரணையின் நோக்கம் ஆகும். தமிழக காவல்துறைக்கு உலக அரங்கில் சிறப்பான பெயர் உள்ளது. பெயருக்கு களங்கம் வர அனுமதிக்கக்கூடாது. தமிழகத்தில் குற்றவியல் வழக்குகளில் விசாரணை தரம் குறைந்து வருகிறது.  குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது குறைவாகவும், விடுதலையாவது அதிகமாகவும் உள்ளது.

இச்செயல் தொடர்ந்தால், பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழந்துவீடுவார்கள். இதனால், வழக்கில், உள்துறை செயலாளர், டிஜிபி, இந்த வழக்கின் விசாரணை அதிகாரிகள் முத்துக்குமார் மற்றும் பவுல் எதிர்மனு தாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.  விசாரணை அதிகாரிகள் குற்ற வழக்குகளை விசாரிப்பதில் போதிய நிபுணத்துவம் பெற்றுள்ளார்களா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி. வழக்கு குறித்து உள்துறை செயலாளர், டிஜிபி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 12-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.



Tags : investigation ,Tamil Nadu Police ,branch ,ICC , Low quality of investigation in criminal cases: The Tamil Nadu Police should not be allowed to be tarnished ... ICC branch opinion. !!!
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...