×

ரேஷன் கடையை உடைத்து காட்டு யானை அட்டகாசம்

வால்பாறை: வால்பாறையை அடுத்து உள்ள கருமலை எஸ்டேட்டில் உள்ள ரேஷன் கடையில் நேற்று முன் தினம் பொது வினியோகத்திற்காக 9 டன் அரிசி, சர்க்கரை, பருப்பு மற்றும் பொருட்களை மகளிர் குழுவினர் இருப்பு வைத்து உள்ளனர். எஸ்டேட் பகுதியில் உள்ள வனத்தில் இருந்து வந்த 6 யானைகள் ரேஷன் கடையையின் சுவற்றை நேற்று அதிகாலை உடைத்து, 1 மூட்டை அரிசியை எடுத்து வெளியே போட்டு சாப்பிடத்துவங்கியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை அருகில் உள்ள வனத்திற்குள் விட்டனர். இந்நிலையில் அரிசி மூட்டையுடன் சென்ற யானைகள் வழிநெடுங்கவும் அரிசியை வாரி இறைத்து சாப்பிட்டு சென்று உள்ளது. யானைகள் மீண்டும் வரலாம் என்ற நிலை தொடர்வதால் பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற வட்ட வழங்கல் அலுவலர் பன்னீர் ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய உத்தரவிட்டு உள்ளார்.

Tags : ration shop , Ration shop, wild elephant
× RELATED மணல்மேட்டில் நகரும் ரேசன் கடை எம்எல்ஏ துவக்கி வைத்தார்