×

போடி - மதுரை ரயில் சேவை 6 மாதத்தில் தொடங்கும்: தேனி எம்பி ரவீந்திரநாத்குமார் பேட்டி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் மதுரை - போடி அகலரயில் பாதை தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணியை தேனி தொகுதி அதிமுக எம்பி நவீந்திரநாத்குமார் நேற்று பார்வையிட்டார். அப்போது, ‘பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பாதை, பாறையிலிருந்து ஏற்படும் நீர் கசிவு, அவற்றை வெளியேற்றப்படும் வாறுகால் மற்றும் ரயில் தண்டவாளங்கள் ஆய்வு செய்தார். இது குறித்து ரயில்வே துறை அதிகாரிகளிடம் பணி விவரத்தை கேட்டறிந்தார்.

பின்னர் எம்பி நிருபர்களிடம் கூறியதாவது: மதுரை - போடி அகலரயில் பாதை பணி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் பேசினேன். இந்த திட்டத்திற்கு போதிய நிதி இல்லாமல் இருந்தது. இது குறித்து பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். இதையடுத்து முதற்கட்டமாக ரூ.50 கோடி, இரண்டாவது கட்டமாக ரூ.75 கோடி ஒதுப்பட்டு பணிகள் விரைவாக நடக்கின்றன. இன்னும் 6 மாதத்தில் மதுரை - போடி ரயில் சேவை தொடங்கும். தேனி நகரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க வாய்ப்புள்ளது’ என தெரிவித்தார்.

Tags : Bodi - Madurai ,Rabindranath Kumar ,Theni ,interview , Podi, Madurai, train service
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையடிவார...