×

இந்தியா பெரிதும் எதிர்பார்த்த ஆக்ஸ்போர்டு தடுப்பூசி தயாரிப்பில் பின்னடைவு : ஒருவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தம்!!


லண்டன் : கொரோனா தடுப்பு மருந்து சோதனையின் போது, தன்னார்வலர் உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து தடுப்பூசி சோதனையை பிரிட்டன் நிறுவனமான ஆஸ்ட்ரா செனெகா நிறுத்தி உள்ளது. உலகையே உலுக்கி வரும் கோவிட் 19 வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து பிரபல பிரிட்டன் நிறுவனமான ஆஸ்ட்ரா செனெகா உருவாக்கி இருந்தது. azd1222 என்று பெயரிடப்பட்ட அந்த மருந்தின் 2 கட்ட சோதனைகள் வெற்றி அடைந்த நிலையில், உலகளவில் இந்த தடுப்பு மருந்து மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்தது.

இதையடுத்து 3வது மற்றும் இறுதி கட்ட பரிசோதனைக்காக தன்னார்வலர்களின் தடுப்பு மருந்தைச் செலுத்தி ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில் சோதனை நடத்தப்பட்ட தன்னார்வலர் ஒருவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால் தனது சோதனைகளை ஆஸ்ட்ரா செனெகா நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரிட்டன் வைரஸ் தடுப்பு மருந்தின் இறுதிகட்ட சோதனை பின்னடைவை சந்தித்து இருப்பது உலக நாடுகளை ஏமாற்றம் அடைய செய்துள்ளது.

சோதனையின் போது இது போன்ற பிரச்னைகளை எழுவது சாதாரணம் என்று கூறியுள்ள ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம், காரணங்களை கண்டறிந்து சரி செய்த பின்னர், கொரோனா தடுப்பு மருந்து சோதனை தொடரும் என்று கூறியுள்ளது. இந்த மருந்தினை முழு அளவில் தயாரிக்க இந்திய மருந்து நிறுவனமான சீரம் முழு வீச்சில் தயாராகி வந்த நிலையில், இறுதி கட்ட ஆய்வுகளை நிறுத்திவிட்டதாக ஆஸ்ட்ரா செனெகா நிறுவனம் கூறியுள்ளது.



Tags : India ,Oxford ,Test , India, Oxford Vaccine, Regression, Illness, Testing, Stop
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...