×

காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி

புதுடெல்லி: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில், லடாக் எல்லை, கொரோனா உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி தருவதென சோனியா தலைமையிலான காங்கிரஸ் குழு முடிவு செய்துள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 14ம் தேதி முதல் வார விடுமுறையின் அக்டோபர் 1ம் தேதி வரை நடக்க உள்ளது. இதில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள், கட்சியின் வியூகம் குறித்து முடிவு செய்ய சோனியா தலைமையில் காங்கிரசின் நாடாளுமன்ற யுக்தி குழு கூட்டம் வீடியோ கான்பரன்சிங்கில் நேற்று நடந்தது.

இதில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில், நடப்பு கூட்டத் தொடரில் மீண்டும் கேள்வி நேரத்தை கொண்டு வர வேண்டும், கொரோனா பாதிப்பில் இந்தியா உலகளவில் 2வது இடத்தை நெருங்கி இருக்கும் நிலையில், வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறல் உள்ளிட்டவை குறித்து கேள்வி எழுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஒட்டு மொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி தரவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

* கடிதத்துக்குப் பின்...
காங்கிரஸ் கட்சி தலைமையை விமர்சனம் செய்து மூத்த தலைவர்கள் சிலர் எழுதிய கடிதம், காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்திற்கு முன்பாக கசிந்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு முதல் முறையாக காங்கிரஸ் தலைவர்கள் நேற்று சமூக வலைதளம் மூலமாக ஒருவரை ஒருவர் நேரில் பார்த்து கூட்டத்தில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.

* மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கு பொது வேட்பாளர்
மாநிலங்களவையின் தலைவராக, துணை ஜனாதிபதியான வெங்கையா நாயுடு தற்ேபாது இருக்கிறார். ஆனால், துணைத் தலைவர் பதவி இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த கூட்டத் தொடரில் அவர் தேர்ந்தெடுக்கப்படலாம் என தெரிகிறது. இந்நிலையில், இந்த பதவிக்கு, எதிர்க்கட்சிகளில் இருந்து ஒருவரை ஒருமனதாக தேர்வு செய்து நிறுத்தலாம் எனவும் காங்கிரஸ் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : meeting ,session ,government ,crisis ,Congress , Congress meeting results, parliamentary session, federal government, severe crisis
× RELATED ஆலோசனை கூட்டம்