×

சென்னை மாநகர காவல் துறையில் பிறந்த நாளன்று போலீசாருக்கு விடுமுறை: ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னை: சென்னை மாநகர காவல்துறையில் பணியாற்றும் போலீசாருக்கு பிறந்தநாளில் விடுமுறை அளிக்கப்படும் என்று காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.சென்னை மாநகர காவல் ஆணையராக கடந்த ஜூன் மாதம் மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றும் போலீஸ்காரர்களுக்கு அவர்களது பிறந்த நாளில் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார். போலீசார் முக்கியமான நாட்களில் குடும்பத்துடன் நேரம் செலவிட முடியாமல் இருந்தனர். தற்போது காவல் ஆணையரின் இந்த அறிவிப்பு போலீசாருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. ‘பிறந்தநாளுக்கு முன்தினம் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு மற்ற போலீசார் வாழ்த்து தெரிவிக்க வேண்டும்’ என்றும் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.

Tags : policemen ,Maheshkumar Agarwal ,birthday ,Chennai Metropolitan Police , Chennai, Metropolitan Police, on his birthday, a holiday for the police, Commissioner Maheshkumar Agarwal
× RELATED உத்தரபிரதேச முதல்வர் யோகியின்...