×

பரங்கிமலை-சென்ட்ரல் இடையே மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்

சென்னை: பரங்கிமலை முதல் சென்ட்ரல் இடையே பச்சை வழித்தடத்தில் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. தமிழகத்தில் 7ம் தேதி சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. முதல்நாளில் விமானநிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வரையில் நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. பயணிகள் வரவை பொறுத்து பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில்களை இயக்க நிர்வாகம் திட்டமிட்டது. இந்தநிலையில், பரங்கிமலை முதல் சென்ட்ரல் இடையே பச்சை வழித்தடத்தில் இன்று மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையில் ரயில்கள் இயக்கப்படும்.

கூட்ட நெரிசல் மிகுதியான நேரங்களில் 5 நிமிடத்திற்கு ஒரு ரயிலும், மற்ற நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு ரயிலும் இயக்கப்பட உள்ளது. இதேபோல், மெட்ரோ ரயில் சேவை தொடங்கிய முதல் நாளான 7ம் தேதி சேவையை வெறும் 5 ஆயிரத்து 33 பேர் மட்டுமே பயன்படுத்தியுள்ளனர். வழக்கமாக மெட்ரோ ரயில் சேவையை நாள் தோறும் 90 ஆயிரம் பேர் வரையில் பயன்படுத்துவார்கள். ஆனால், கொரோனா பரவல் காரணமாக சேவையை பயன்படுத்த பொதுமக்கள் தயக்கம் காட்டியுள்ளனர். வரக்கூடிய நாட்களில் சேவையை அதிகம் பேர் பயன்படுத்துவார்கள் என மெட்ரோ ரயில் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


Tags : Metro ,Parangimalai-Central , Parangimalai-Central, Metro trains, today, operation
× RELATED பண்டிகை காலத்தை முன்னிட்டு: 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்