×

வாரியத்தின் ஒப்புதல் கிடைத்ததும் சென்னையில் மின்சார ரயில்கள் இயக்கப்படும்: பொது மேலாளர் தகவல்

சென்னை: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் நேற்று காணொலி காட்சி மூலமாக நிருபர்களிடம் கூறியதாவது: புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக தமிழகத்தில் 265 ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்களில் 7.35 லட்சம் பேர் பயணித்துள்ளனர். மேச்சேரி சாலை-மேட்டூர் இடையே 12 கி.மீ இரட்டை வழி பாதைகள் மற்றும் தாம்பரம்-செங்கல்பட்டு 3 வழி பாதைகள் பணி முடிவடைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 270 வழிதடங்களை மின்மயமாக்கல் செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. சென்னையில் மின்சார ரயில்களை இயக்குவதற்கு தமிழக அரசு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

எனவே, ரயில்வே வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மின்சார ரயில்கள் இயக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் கூடுதலாக சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரிய ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். ஒப்புதல் கிடைத்தால் மதுரை, கோவை வழிதடங்களில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படும். கொரோனா காலத்தில் இதுவரை தெற்கு ரயில்வேயில் 2,45,190 முககவசங்களும், 37,040 லிட்டர் கிருமி நாசினியும் தயாரிக்கப்பட்டுள்ளது. 2.02 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளது.

Tags : Board ,Chennai , Board Approval, Chennai, Electric Trains, Operated, General Manager Information
× RELATED குடிநீர், கழிவுநீர் வரி செலுத்த வரும்...