×

தி.நகர் பல்அடுக்கு வாகன நிறுத்தம் அடுத்த மாதம் திறப்பு; சென்னை மக்களுக்கு தினசரி 700 மில்லியன் லிட்டர் குடிநீர்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

சென்னை: உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடந்தது.  அதில் அமைச்சர் வேலுமணி பேசியதாவது: சென்னை தி.நகரில் ரூ40.79 கோடியில் அமைக்கப்பட்டு பல் அடுக்கு வாகன நிறுத்தத்தை முதல்வர் அக்டோபர் மாதம் திறந்து வைப்பார். ராஜிவ் காந்தி சாலையில் கஸ்தூரிபா ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் ரயில் நிலையம் வரை நடைபாதை மற்றும் மிதிவண்டி பாதை அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. ஜூலை மாதம் வரை 8.06 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர் பெறப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக, 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரை செப்டம்பர் 14ம் தேதி முதல் வழங்கப்படும் என்று ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது. சென்னையில் உள்ள நீர்த்தேக்கங்களில் கடந்த ஆண்டு 1264 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த ஆண்டு 52,225 மில்லியன் கன அடி நீர் இருந்தது. இந்த நீர் கொள்ளளவைக் கணக்கில் கொண்டு கடந்த மே மாதம் முதல் சென்னைக்கு குடிநீர் விநியோகம் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் என்ற அளவிலிருந்து 700 மில்லியன் லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நீர் ஆதாரங்களை கொண்டு 2021 மே மாதம் வரை நாள் ஒன்று 700 மில்லியன் லிட்டர் குடிநீர் எந்தவித தடையுமின்றி வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : car park ,Nagar ,SB Velumani ,Chennai ,Drinking Water ,SPVelumani , T.Nagar Multi-Storey Parking, Opening, Drinking Water, S.P.Velumani
× RELATED சிவகாசி மாநகராட்சியில் புதுப்பொலிவு...