×

பொது பயன்பாட்டுக்கு விடப்பட்ட ரஷ்யா தடுப்பூசியை வாங்க பரிசீலனை: மூத்த அதிகாரி தகவல்

புதுடெல்லி: ரஷ்யாவின் கொரோனா தடுப்பூசியை வாங்குவது குறித்து பல்வேறு கட்ட ஆய்வுகள் நடந்து வருவதாக நிதி ஆயோக் உறுப்பினர் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியை உருவாக்கிய முதல் நாடு என ரஷ்யா தன்னைத்தானே கடந்த ஆகஸ்ட் 11ம் தேதி அறிவித்துக் கொண்டது. ஆனாலும், மருந்தின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. இதற்கிடையே, ரஷ்யா கண்டுபிடித்த, ‘ஸ்பூட்னிக் வி’ நல்ல பலனை தருவதாகவும், அதில் பாதகமான அம்சங்கள் இல்லை என்றும் லான்சட் இதழ் ஆய்வில் தகவல் வெளியிடப்பட்டது. ரஷ்யாவில் நேற்று முதல் இந்த மருந்து, பொது பயன்பாட்டுக்கு வெளியிட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த மருந்து குறித்த தகவல்களை இந்தியாவிடம் ரஷ்யா வழங்கி, மருந்தின் மேம்பாட்டு ஆய்வு, தயாரிப்புக்கான ஒத்துழைப்பை கோரி உள்ளது. இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் நேற்று கூறுகையில், ‘‘ரஷ்யாவின் கோரிக்கை வந்துள்ளது. இதை ஏற்பது குறித்து பல நிறுவனங்கள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன. நட்பு நாட்டிடம் இருந்து இதுபோன்ற கூட்டு ஒத்துழைப்பு கோரப்படுவதை முக்கியமானதாக இந்தியா கருதுகிறது. எனவே பரிசீலனையின் முடிவில் விரைவில் முடிவு அறிவிக்கப்படும்’’ என்றார்.

அடுத்த மாதம் ரெடியாகிடும்
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகையில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்காவின் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. திறன் வாய்ந்த, தரமான இந்த மருந்து அதிபர் தேர்தலுக்கு முன்பாக அடுத்த மாதத்திலேயே (அக்டோபர்) ரெடியாகி விடும்,’’ என்றார்.

Tags : Russia ,General , General Use, Vaccine in Russia, Review
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...