சில்லி பாயின்ட்...

* இங்கிலாந்து அணி விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். அவர் இதுவரை 47 டெஸ்ட், 142 ஒருநாள், 71 டி20 என சர்வதேச போட்டிகளில் 7841 ரன் குவித்துள்ளதுடன் கீப்பராக 354 விக்கெட் வீழ்ச்சியில் பங்களித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியாவுடன் நேற்று நடந்த 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில் பட்லர் விளையாடவில்லை

* பிரான்ஸ் கால்பந்து அணி நட்சத்திர வீரர் எம்பாப்பேவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து நேஷன்ஸ் லீக் தொடரில் குரோஷியா அணியுடனான போட்டியில் அவர் விளையாடவில்லை.

* நம்பர் 1 வீராங்கனையும் பிரெஞ்ச் ஓபனில் நடப்பு சாம்பியனுமான ஆஷ்லி பார்தி (ஆஸி.), கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டுக்கான பிரெஞ்ச் ஓபன் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

* பார்சிலோனா அணியில் தொடர்ந்து நீடிக்கப்போவதாக அறிவித்துள்ள நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி நேற்று சக வீரர்களுடன் இணைந்து பயிற்சியை தொடங்கி உள்ளார்.

Related Stories: