×

ஹிமாலயா நிறுவனம் சார்பில் மை பர்ஸ்ட் பிம்பிள் பிரசாரம்

சென்னை: ஹிமாலயா டிரக் கம்பெனி தனது முதல் பிரசாரமான `மை பர்ஸ்ட் பிம்பிள்’ இன் 4வது பதிப்பை தொடங்கியது. இந்த பிரசாரம் இளைஞர்களிடையே பிம்பிள் பற்றிய உரையாடலை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும், உடலியல் மாற்றங்கள் மற்றும் தோல் தொடர்பான கவலைகள் குறித்து வருத்தப்படாமல் பெரிய வாழ்க்கை இலக்குகளில் கவனம் செலுத்த இளைஞர்களை ஊக்குவிக்கிறது. நாட்டின் முன்னணி `பேஸ் வாஷ்’ பிராண்டான `ஹிமாலயா பியூரிபையிங் நீம் பேஸ் வாஷா’’ ல் கருத்தாக்கம் செய்யப்பட்ட இந்த பிரசாரத்தின் 22வது நிகழ்வு இந்த ஆண்டு டிஜிட்டல் முறையில் சென்றது.

புகழ்பெற்ற சர்வதேச உடற்பயிற்சி விளையாட்டு வீரர், TEDx பேச்சாளர் மற்றும் தொழில் முனைவோருமான சோனாலி சுவாமி வெபினாரின் விருந்தினர் பேச்சாளராக இருந்தார். இந்த டிஜிட்டல் நிகழ்வில் உத்தரபிரதேசத்தின் மூன்று பள்ளிகளில் இருந்து 8ம் வகுப்பு தொடங்கி 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதுகுறித்து ஹிமாலயா டிரக் கம்பெனியின் நுகர்வோர் தயாரிப்புகள் பிரிவின் பேஸ் வாஷ் பிராண்ட் மேனேஜர் கீர்த்திகா தாமோதரன் கூறுகையில், “பிம்பிள்ஸ் காரணமாக பதின்வயதினர் சமூக கூட்டங்களை தவிர்க்கிறார்கள். எனவே, இதுபற்றி ஒரு உரையாடலை தொடங்கவும், சுய நம்பிக்கையின்மை மற்றும் நம்பிக்கையின்மைக்கு வழிவகுக்கும் இந்த விஷயங்களை பற்றி பேசவும் தேவை உள்ளது.
 
மை பர்ஸ்ட் பிம்பிள் என்பது பதின்வயதினரை ஒன்றிணைக்கும் ஒரு தளமாகும். இது பிம்பிள்ஸ் வளரும் ஒரு பகுதியாகும். எல்லோரும் தங்கள் வாழ்க்கையில் இந்த கட்டத்தை கடந்து செல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள உதவுகிறது” என கூறினார்.

Tags : First Pimple Campaign ,Himalaya ,Campaign ,Himalaya Institute , Himalaya Institute, My First Pimple, Campaign
× RELATED திருவாரூர் அருகே கொரடாச்சேரியில்...