×

மயிலாடுதுறை அருகே முன் விரோதத்தில் விவசாயி படுகொலை: மனைவிக்கு வெட்டு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே முன் விரோதத்தில் விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கப்பூர் கிராமம் வடக்கு மேலத்தெருவை சோந்தவர் மதிவாணன் (55). விவசாயி. இவரது மகன் கார்த்தி. கார்த்தியும், வடக்கு கீழத்தெருவை சேர்ந்த ரவி என்பவரது மகள் இலக்கியா என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இதற்கு மதிவாணன் எதிர்ப்பு தெரிவிக்கவே, இலக்கிய கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் இரு குடும்பங்களுக்கிடையே முன் விரோதம் இருந்து வந்தது.இந்நிலையில், நேற்று மாலை ரவி மகன் ராம்க்கும், மதிவாணனுக்கும் கப்பூர் கடைவீதியில் தகராறு ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் இருவரையும் விலக்கிவிட்டுள்ளனர். அப்போது ராம், மதிவாணனை பார்த்து, ‘உன்னை விட மாட்டேன், ஒழித்து விடுவேன்’ என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றார்.

அதன் பின்னர், நேற்றிரவு மதிவாணன் வீட்டில் டிவி பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ராம், அவரது தந்தை ரவி, அவரது உறவினர் சதீஷ் ஆகிய 3 பேரும் வீட்டுக்குள் புகுந்து மதிவாணனை அரிவாளால் சரமாரி வெட்டினர். அதை தடுக்க வந்த மதிவாணன் மனைவி பூங்கோதைக்கும் அாிவாள் வெட்டு விழுந்தது. இதில் அவரது வலது மணிகட்டு துண்டிக்கப்பட்டது.படுகாயமடைந்த மதிவாணன், அவரது மனைவி பூங்கோதை இருவரும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனில்லாமல் மதிவாணன் நேற்றிரவு பரிதாபமாக இறந்தார். ஆபத்தான நிலையில் இருந்த பூங்கோதை, திருவாரூர் மருத்துவ கல்லூரி மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து பெரம்பூர் போலீசார் வழக்கு பதிந்து ராம், ரவி, சதீஷ் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Tags : hostile ,Mayiladuthurai , Farmer, massacred ,front, hostile ,Mayiladuthurai,
× RELATED வாசுதேவநல்லூர் அருகே கிணற்றில் டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி