×

நன்றாய் கைகளைக் கழுவு! ஒன்றாய் இருப்பதிலிருந்து நழுவு: தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா...6,599 பேர் டிஸ்சார்ஜ்

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,684 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 4,74,940-ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் செப்டம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,80,422-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72,775-ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 33,23,950-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 75,809 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,133 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும், 73,521 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக 5,684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கூறியதாவது;

* தமிழகத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை 4,16,715 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த 6,599 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

* தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 87 பேர் உயிரிழந்துள்ளனர். பலி எண்ணிக்கை 8,012- ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் இன்று ஒரே நாளில் 988 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 1,43,602 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் மொத்தம் 163 மையங்களில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தற்போது 50,213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* தமிழகத்தில் இதுவரை 54,62,277 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்த 2 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

* இதுவரை தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 2,86,383 ஆண்கள், 1,88,528 பெண்கள், 29 திருநங்கைக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

* வெளிமாநிலங்களில் அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள்;

     ^ கர்நாடகா - 1

     ^ மேற்கு வங்கம் - 1

Tags : Corona ,Tamil Nadu , Tamil Nadu, Corona, Discharge
× RELATED மேற்படிப்பை முடித்த பின் அரசு...