×

முக்கிய நதிகளை புத்துயிரூட்ட மத்திய அமைச்சருடன் சத்குரு கலந்துரையாடல்

கோவை: இந்தியாவில் உள்ள முக்கிய நதிகளை புத்துயிரூட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருடன், ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கலந்துரையாடினார். இந்த கலந்துரையாடலின் முக்கிய அம்சமாக விவசாயிகள் மத்தியில் மரம் சார்ந்த விவசாயம் அல்லது வேளாண் காடு முறையை ஊக்குவிப்பது தொடர்பாக இருவரும் கலந்துரையாடினர். மண் மற்றும் நீர் வளத்தை பெருக்குவதற்கும், மக்களின் உணவுமுறையில் ஊட்டச்சத்தை அதிகரிப்பதற்கும், பருவநிலை மாற்றத்தை கையாள்வதற்கும் மரம் சார்ந்த விவசாயம் எந்தளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை சத்குரு விளக்கமாக பேசினார்.

மத்திய அமைச்சர் ஜவடேகர் பேசுகையில்,`மரம் சார்ந்த விவசாய முறையை அதிகம் முன்னெடுத்து செல்வதில் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வமுடன் உள்ளார். விவசாயிகள் உற்பத்தி செய்யும் டிம்பர் மரங்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லவும், விற்பனை செய்யவும் டிஜிட்டல் தளத்தை அரசு உருவாக்கி உள்ளது. நாட்டின் பசுமை பரப்பை அதிகரிக்கவும், மண் வளத்தை அதிகரிக்கவும் மத்திய அரசு 49,000 கோடி நிதியை ஒதுக்கி உள்ளது’ என்றார். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நடந்த இந்த கலந்துரையாடல் ஈஷாவின் அதிகாரப்பூர்வ யூ - டியூப் சேனலில்களில் ஒளிப்பரப்பப்பட்டது.

Tags : Satguru ,Union Minister ,rivers ,Prakash Javadekar ,Isha ,Nadi , Satguru, Nadi, Prakash Javadekar, Isha
× RELATED தமிழர்களுக்கு எதிராக கருத்து...