×

சாலையோரம் நின்ற லாரி மீது வேன் மோதி தொழிலாளி பலி

ஆனைமலை: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்தில் உள்ள தனியார் பனியன் தொழிற்சாலைக்கு பொள்ளாச்சி பகுதியில் இருந்து வேன் மூலம் தினமும் பணியாளர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர். நேற்று காலை வழக்கம்போல் பணியாளர்களை அழைத்துக்கொண்டு, ஆனைமலை-உடுமலை ரோடு துறையூர் அருகே வேன் சென்றது.

அப்போது சாலையின் இடது புறத்தில் நின்றுக் கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியது. இதில், வேனின் முன்பகுதியில் அமர்ந்திருந்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த ரஞ்சித்குமார் (27), சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், வேனில் பயணம் செய்த, அங்கலக்குறிச்சியை சேர்ந்த புவனேஷ்வரி (32), ஜான்சி (30), வேனை ஓட்டி வந்த தென்சங்கம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக் பிரபு (29) ஆகியோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஆழியார் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த ரஞ்சித்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காக கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து ஆழியார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : accident ,Tiruppur ,Anaimalai , Anaimalai, Tiruppur, accident
× RELATED லாரி டயரில் சிக்கி தொழிலாளி பலி